Home மாநில செய்திகள் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடை ரத்து

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடை ரத்து

0

தமிழகத்தில் இருந்து கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உட்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக் கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும், அவற்றை தமிழ்நாடு சட்ட விரோத கனிமச் சுரங்கம் கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை திருத்தம் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், காரைக்கால், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக் கற்களை கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விதிகளை செல்லாது என அறிவிக்கக் கோரியும் மது பிரேமநாதன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரித்தது. அப்போது, திருத்த விதிகளுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற வேண்டும். உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் தங்களுக்கு சொந்தமானது எனவும், அவற்றை எங்கு விற்க வேண்டும் என முடிவெடுக்க மனுதாரருக்கு உரிமை உள்ளதால், மூன்று மாத தடைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு சட்ட விரோத கனிமச் சுரங்கம் கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவித்து தீர்ப்பளித்தனர்.

மேலும், அந்த விதிகளின் அடிப்படையில் கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்க முடியாது எனக் கூறி, தமிழக அரசின் தடையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version