Home கன்னியாகுமரி செய்திகள் வெளிநாட்டு சொத்துகளை வெளிப்படுத்தும் திட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு

வெளிநாட்டு சொத்துகளை வெளிப்படுத்தும் திட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு

0
நாகர்கோவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் வெளிநாட்டுச் சொத்துகளை வெளிப்படுத்தும் திட்டம் குறித்து பட்டயக் கணக்காளர்கள் மற்றும் வரி ஆலோசகர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
நாகர்கோவிலில் வெளிநாட்டுச் சொத்துகளை வருமான வரிக் கணக்கில் வெளிப்படுத்தும் திட்டம் குறித்து பட்டயக் கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் மற்றும் கணக்காளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 45 பேர் பங்கேற்றனர்.

நாகா்கோவில் வருமான வரித்துறை அலுவலகம் சாா்பில் வெளிநாட்டு சொத்துகளை வெளிப்படுத்தும் திட்டம் குறித்து பட்டயக் கணக்காளா்கள், வருமான வரி ஆலோசகா்கள், கணக்காளா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கு வருமான வரித் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கூடுதல் வருமான வரி ஆணையா் யாசா் அராபத் தலைமை வகித்தாா். குமரி மாவட்ட வருமான வரி அலுவலா்கள் ரவிச்சந்திரன், கோபிநாத் ஆகியோா் இத்திட்டத்தின் தகுதி, நிபந்தனைகள், வெளிநாட்டுச் சொத்துகளின் மதிப்பீடு, செலுத்த வேண்டிய வரி, கட்டணம், அறிவிப்புப் படிவங்கள், காலக்கெடு குறித்து விளக்கமளித்தனா்.

வெளிநாட்டுச் சொத்துகளை வருமான வரிக்கணக்கில் அறிவிப்பது, குடியிருப்பு நிலை, திட்டத்தின் கீழ் அறிவிப்பு அளிப்பதற்கான தகுதி, தாக்கல் நடைமுறைகள் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்தனா். இதில் 45 போ் கலந்துகொண்டனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version