Home தேசிய செய்திகள் வெள்ள நிவாரண பணியில் தேவையான உதவி: அருணாச்சல், நாகாலாந்து எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி உறுதி

வெள்ள நிவாரண பணியில் தேவையான உதவி: அருணாச்சல், நாகாலாந்து எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி உறுதி

0

அருணாச்சல பிரதேசத்​தில் பரு​வ​மழை தீவிரமடைந்திருக்​கிறது. இதனால் மாநிலத்​தின் 26 மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்​கப்​பட்டு உள்​ளன. மழை, வெள்ள பாதிப்​பு​களால் இது​வரை 7 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். சுமார் ஒரு லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்டு உள்​ளனர். 19 நீர்​மின் நிலை​யங்​கள், 150 சாலைகள், 19 பாலங்​கள் வெள்​ளத்​தால் சேதமடைந்​துள்​ளன.

இதுபோல நாகாலாந்​தில் மழை, வெள்ள பாதிப்​பு​களால் இது​வரை 11 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மோன், திமாபூர், மோகாக்​சங் உள்ளிட்ட மாவட்​டங்​களில் நிலச்​சரிவு​ ஏற்​பட்டு என்​எச் 29 தேசிய நெடுஞ்​சாலை​யில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்டு உள்​ளது.

இந்த சூழலில் அருணாச்சல பிரதேசம் மற்​றும் நாகாலாந்தை சேர்ந்த எம்​.பி.க்​கள் பிரதமர் நரேந்​திர மோடியை டெல்​லி​யில் நேற்று சந்​தித்​துப் பேசினர். இதுதொடர்​பாக பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அருணாச்சல பிரதேசம், நாகாலாந்தை சேர்ந்த எம்.​பி.க்​களு​டன் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினேன். குறிப்​பாக இரு மாநிலங்களில் ஏற்​பட்​டுள்ள வெள்ள பாதிப்​பு​கள் குறித்து ஆலோசனை நடத்​தப்​பட்​டது.

வெள்ள நிவாரண பணி​களில் இரு மாநில அரசுகளு​டன் இணைந்து மத்​திய அரசு செயல்​படும். அனை​வரின் பாதுகாப்புக்காக பிரார்த்​திக்​கிறேன். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறும்​போது, “வெள்​ளத்​தால் பாதிக்கப்பட்ட அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவி​களை​யும் வழங்க பிரதமர் நரேந்​திர மோடி உறுதி அளித்​துள்​ளார்​” என்​று தெரிவித்தார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version