Home கன்னியாகுமரி செய்திகள் அருமனை:   முதியவர் திடீர் மாயம் போலீசில் புகார்

அருமனை:   முதியவர் திடீர் மாயம் போலீசில் புகார்

0

அருமனை அருகே காக்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் (60). இவருக்கு லைசா (55) என்ற  மனைவியும்,   இரண்டு மகள்களும்  உள்ளனர். மகள்கள் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். தங்கப்பன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தங்கப்பன் பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும்  அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது மகள் ஜெனிஃபா என்பவர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தங்கப்பணை தேடி வருகின்றனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version