Home மாநில செய்திகள் “மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்க” –...

“மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்க” – பழனிசாமி

0

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என்றும், அரசியல் குறுக்கீடற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தவெக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தொல்லை அளித்ததாகவும் வருகின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரு மாவட்டத்தின் மக்கள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆட்சியர். அந்த ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை; அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்தே! தமிழக முதல்வருக்கு இது கேவலம்!!

ஒரு மாவட்டத்தின் ஆட்சியர், அம்மாவட்டத்தின் நிர்வாக நீதிபதியும் (District executive Magistrate) இருக்கக்கூடியவர். அவருக்கே நீதி இல்லை என்றால், இதற்கு தமிழக முதல்வர் விஜய்யிடமிருந்து பதில் என்று எதாவது வருமா?

“உள்ளாடையுடன் நிற்கவைப்பேன்” என்று மிரட்டும் அமைச்சர், மனு கொடுக்க வந்தவரைத் தாக்கி “ஆபாச அர்ச்சனை” செய்து அதை மறைக்க முயலும் துணை சபாநாயகர், எல்லாவற்றிற்கும் மேலாக “ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்” அனுப்பிய எம்எல்ஏ என்று தவெக கட்சியைச் சேர்ந்தோர் சட்டம் ஒழுங்கைக் காக்கும் லட்சணம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

தங்கள் கட்சியினர் தவறு செய்தால் வாய்மூடி மவுனியாக இருக்கும் அரசு, மற்ற கட்சியினர் செய்திருந்தால் இன்று அனைத்து மைக்குகள் முன்னரும் எவ்வளவு பேசியிருப்பர்?

நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது ஆட்சியைக் காப்பற்றிக் கொள்ள, எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பயப்படுகிறாரா?

வாக்களித்த மக்களின் பாதுகாப்பை விட, முதல்வர் நாற்காலி தான் முக்கியமென்று ஜோசப் விஜய் கருதுகிறாரா?

பாலியல் வழக்கு ஒன்றில் தொடர்பு இருந்ததாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ விஜய் சரவணன் மீது வழக்கே பதியாமல், அவருக்கு சட்டமன்றத்திலேயே ‘நன்னடத்தை சான்றிதழ்’ அளித்து வழக்கை இழுத்து மூடிய அதே முறையை அருள் விக்னேஷுக்கும் பயன்படுத்தப் போகிறதா இந்த அரசு?

ஒரு ஆட்சியாளராக மாவட்ட ஆட்சியருக்கு நடந்த இந்த கொடுமைக்கு எதிராக வழக்கு பதிந்து தன் கட்சி எம்எல்ஏ-வை கைது செய்ய வேண்டும். நேர்மையான, அரசியல் குறுக்கீடற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். செய்வாரா முதல்வர் விஜய்?” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version