உலக ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் கனடாவில் உள்ள ஆன்டாரியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், மலேசியாவின் டாய்ஸ் யே சான் லீயை எதிர்த்து விளையாடினார். இந்த மோதலில் அனஹத் சிங் 11-4, 11-8, 11-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
