Home சினிமா செய்திகள் நிறு​வனத்​தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

நிறு​வனத்​தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

0

தமிழில் முன்​னணி நடிக​ராக இருக்​கும் சிவகார்த்திகேயன், தனது சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் மூலம் திரைப்​படங்​களை​யும் தயாரித்து வரு​கிறார். ‘கனா’, ‘நெஞ்​ச​முண்டு நேர்​மை​யுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்​டுக்​காளி’, ‘தாய்க்​கிழ​வி’ உள்பட சில படங்​களைத் தயாரித்​துள்​ளார். அடுத்​து, அம்​மா​முத்து சூர்யா இயக்​கும் படத்​தைத் தயாரிக்க இருக்​கிறார்.

இதற்​கிடையே அவரது தயாரிப்பு நிறு​வனப் பெயரைப் பயன்​படுத்தி சிலர் மோசடி​யில் ஈடு​பட்டு வந்​துள்​ளனர். அது தொடர்​பான வாட்​ஸப் மெசேஜ்களை சமூக வலை​தளப் பக்​கத்​தில் பகிர்ந்​துள்ள சிவ​கார்த்​தி​கேயன் புரொடக் ஷன்​ஸ், அறிக்கை ஒன்றை வெளி​யிட்​டுள்​ளது.

அதில், “எங்​கள் நிறு​வனத்​தின் திரைப்​படங்​களுக்​கான நடிகர் தேர்வு தொடர்​பாக இயக்​குநர்​களோ, ஒருங்​கிணைப்​பாளர்​களோ, காஸ்​டிங் ஏஜென்ட்​களோ அல்​லது மூன்​றாம் தரப்பு பிர​தி​நி​தி​களோ நியமிக்​கப்​பட​வில்​லை. எங்​கள் நிறு​வனம் சார்​பான அதி​காரப்​பூர்​வ​மான நடிகர்​/நடிகை தேர்வு அறி​விப்​பு​கள் அல்​லது தகவல்​கள் எங்​கள் அதி​காரப்​பூர்வ சமூக வலை​தளப் பக்​கங்​கள் மூல​மாக மட்​டுமே வெளி​யிடப்​படும்.

இதற்கு மாறாக வரும் வாட்​ஸ்​அப் செய்​தி​கள், மின்​னஞ்​சல்​கள், அழைப்​பு​கள் அல்​லது சமூக வலை​தளப் பதிவு​களை நம்ப வேண்​டாம். சிவ​கார்த்​தி​கேயன் புரொடக் ஷன்ஸ் பெயரைத் தவறாகப் பயன்​படுத்​து பவர்​கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version