மலேசியாவில் உள்ள நெகிரி செம்பிலான் பகுதியில் துவாங்கு முஹ்ரிஸ் கோப்பைக்கான பிஎஸ்ஏ சாலஞ்சர்ஸ் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அபய் சிங், 59-வது இடத்தில் உள்ள ஹாங்காங்கின் ஹென்றி லியுங்குடன் மோதினார். இதில் அபய் சிங் 11-7 6-11 3-11 11-5 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
