Home சினிமா செய்திகள் “சமூகநீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தவெக அமைச்சரவை ” – மாரி செல்வராஜ் பாராட்டு

“சமூகநீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தவெக அமைச்சரவை ” – மாரி செல்வராஜ் பாராட்டு

0

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் புதிய அமைச்சரவை, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் கூட்டணி அமைச்சரவையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டியுள்ளார்.

இது குறித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில், “சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பெரும் எதிர்பார்ப்போடு இந்த அமைச்சரைவையில் இடம்பெற்றிருக்கும் இளம்தலைமுறை அமைச்சர்களுக்கும் பெரும் கனவோடு இடம்பெற்றிருக்கும் பட்டியலின மற்றும் சிறுபான்மை அமைச்சர்களுக்கும் , பெரும் இலக்கோடு இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பிரியங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். மக்கள் பணிகள் சிறக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version