Home விளையாட்டு செய்திகள் இந்தியா – நியூஸிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து

இந்தியா – நியூஸிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து

0

இந்​திய கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்றுப்பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடை​யி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் போட்டித் தொடரில் ஆக்​லாந்​தில் நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. தொடர்ந்து வெலிங்​டனில் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி 4 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றியை வசப்படுத்தியிருந்தது.

இந்த இரு ஆட்​டங்​களும் மழை காரண​மாக பாதிக்​கப்பட்டிருந்தன. இந்​நிலை​யில் 3-வது ஆட்​டம் ஹாமில்​டனில் உள்ள செடன் பார்க் மைதானத்​தில் நேற்று நடை​பெற இருந்​தது. மழை காரண​மாக 40 ஓவர்​களை கொண்ட போட்​டி​யாக நடத்த முடிவு செய்​யப்​பட்​டிருந்​தது. டாஸில் வெற்றி பெற்ற இந்​திய அணியின் கேப்​டன் ஷுப்​மன் கில் பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.

ஆனால் போட்டி தொடங்​கு​வதற்கு முன்​னதாக மீண்​டும் மழை பெய்​தது. 20 ஓவர்​கள் கொண்ட போட்​டியை நடத்​து​வதற்​கான உள்​ளூர் நேரப்​படி இரவு 7.50 மணி காலக்​கெடுவுக்கு 70 நிமிடங்​களுக்கு மேல் அவகாசம் இருந்த நிலை​யில் தொடர்ந்து பெய்த மழை காரண​மாக போட்டி ரத்து செய்​யப்​படுவ​தாக நடுவர்​கள் அறி​வித்​தனர். இத​னால் ரசிகர்​கள் ஏமாற்​றம் அடைந்​தனர்.

5 போட்​டிகள் கொண்ட தொடரில் இந்​திய அணி 2-0 என முன்​னிலை வகிக்​கிறது. 4-வது ஒருநாள் போட்டி வரும் 13-ம் தேதி மவுண்ட்​மவுங்​க​னி​யில் உள்ள பே ஓவல் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த போட்​டி​யிலும் 15-ம் தேதி நடை​பெற உள்ள கடைசி போட்​டி​யிலும் ஷுப்​மன் கில், கே.எல்.ராகுல் ஆகியோர் விளை​யாட​மாட்​டார்​கள்.

இவர்​களு​டன் அன்​ஷுல் கம்​போஜ், குல்​தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகை​யில் வெலிங்டனில் உள்ள இந்​திய டெஸ்ட் அணி​யுடன் இணைய உள்ளனர். இத​னால் கடைசி இரு ஒருநாள் போட்​டிகளி​லும் ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் ஆகியோரது இடத்தை இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்​வாட் நிரப்​பக்​கூடும். கேப்​டனாக ஸ்ரேயஸ் ஐயர் செயல்​பட உள்​ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version