Home தேசிய செய்திகள் பிஹார் நீட் மறுதேர்வு மையத்தில் ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ பாணியில் மோசடி செய்ய முயன்ற 24 பேர்...

பிஹார் நீட் மறுதேர்வு மையத்தில் ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ பாணியில் மோசடி செய்ய முயன்ற 24 பேர் கைது

0

நாடு முழு​வதும் நீட்​-​யுஜி மறு​தேர்வு நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. பிஹார் மாநிலம் லக்​கிச​ராய் பகு​தி​யில் நடை​பெற்ற நீட் மறு​தேர்​வின்போது, ‘முன்​னா​பாய் எம்பிபிஎஸ்’ திரைப்பட பாணி​யில் ஒரு கும்​பல் மோசடி​யில் ஈடுபட முயன்​றது. இதை போலீ​ஸார் முறியடித்​துள்​ளனர்.

இந்த கும்​பல் விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​குப் பதிலாக நுழைவுத் தேர்வை எழுது​வதற்​காக ‘சால்​வர்​களை’ (மாற்று நபர்​களை) ஏற்பாடு செய்​த​தாக காவல் துறை குற்​றம் சாட்​டி​யுள்​ளது. இந்த நடவடிக்​கை​யின் மூலம் மருத்​துவ மாணவர்​கள் மற்​றும் தேர்வு செயல்​பாட்​டில் ஈடு​பட்​டிருந்த பயோமெட்​ரிக் (கைரேகை சரி​பார்ப்​பு) நிறுவன ஊழியர்​கள் உட்பட 24 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

கயா நகரில் உள்ள ஏஎன்​எம் மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் மருத்துவ​மனை​யின் மருத்​துவ மாணவ​ரான அர்​பித் ராஜ், இந்த மோசடி குழு​வைச் சேர்ந்த முக்​கிய நபர்​களில் ஒரு​வர் என்று காவல் துறை சந்​தேகிக்​கிறது. அர்​பித் ராஜிடம் ஏற்கெ​னவே 2024 நீட் வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்​பாக சிபிஐ விசா​ரணை நடத்தியது குறிப்​பிடத்​தக்​கது.

பாட்னா மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் மருத்​து​வ​மனை​யில் மூன்றாம் ஆண்டு எம்​பிபிஎஸ் படித்து வரும் மயங்க் காஷ்யப் என்ற மற்​றொரு மருத்​துவ மாணவரும் இந்த வழக்கு தொடர்​பாக கைது செய்​யப்​பட்​டுள்​ளார். மேலும், தேர்வு செயல்​பாட்​டில் ஈடுபட்டிருந்த பயோமெட்​ரிக் நிறு​வனத்​தைச் சேர்ந்த 14 ஊழியர்களும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

பயோ மெட்​ரிக் நிறுவன ஊழியர் போல் நடித்து மயங்க் காஷ்யப் ஹசன்​பூர் அரசு மேல்​நிலைப்​பள்ளி தேர்வு மையத்​துக்​குள் நுழைந்த​தாகக் கூறப்​பட்​டதை அடுத்​து, இந்த மோசடி நெட்வொர்க் காவல் துறை​யின் கண்​காணிப்​பில் வந்​தது.

விசா​ரணை​யின் போது அவர்​தான் முதலில் பிடிபட்​டார். அதைத் தொடர்ந்து லக்​கி ச​ரா​யில் உள்ள கேஆர்கே உயர்​நிலைப் பள்ளி மற்​றும் கேந்​திரிய வித்​யாலயா ஆகிய இடங்​களில் காவல் துறை சோதனை நடத்​தி​யது. இந்த சோதனை​களின்​போது, 7 விண்ணப்பதா​ரர்​கள் மற்​றும் இந்த மோசடி நடவடிக்​கை​யுடன் தொடர்​புடைய மேலும் பலர் கைது செய்​யப்​பட்​டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version