Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் லாட்டரி, மது விற்ற 2 பேர் கைது

நாகர்கோவிலில் லாட்டரி, மது விற்ற 2 பேர் கைது

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று கனகமூலம் சந்தை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கேரள லாட்டரி விற்றதாக திலகர் தெருவை சேர்ந்த கோபகுமார் (வயது 51) என்பவரை கைது செய்து 7 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல கோட்டார் போலீசார் வட்டவிளை பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (42) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version