Home மாநில செய்திகள் சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து

0

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதால், பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றும் ஒரே நாளில், புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூரு, திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த அனைத்து விமானங்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தை சேர்ந்தவை. நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version