நீங்கள் என் இதயத்தை வென்றுவிட்டீர்கள் – சமந்தா டுவீட்

0
123

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சாகுந்தலம் திரைப்படத்தை நடிகை சமந்தா இன்று படக்குழுவினருடன் பார்த்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடைசியாக இன்று சாகுந்தலம் திரைப்படத்தை பார்தேன். குணசேகர் சார் நீங்கள் என் இதயத்தை வென்றுவிட்டீர்கள். என்ன ஒரு அழகான படம். மிகப்பெரிய காவியத்தை அன்புடன் உயிர்பித்துள்ளீர்கள். இந்த படத்தினை ரசிகர்கள் உணர்ச்சிகரமாக கொண்டாடுவதை காண ஆர்வமாக உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here