டெல்லி அருகே நந்து நகரி பகுதியை சேர்ந்தவர் காசிம் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்தார். இந்தநிலையில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அவர் காசிமுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காசிம் தோழி இருந்த வீட்டிற்குள் புகுந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காசிம் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தோழியை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினார். அதில் சிறுமி படுகாயமடைந்தார். தப்பியோடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 16 வயது சிறுமியை வாலிபர் துப்பாக்கியால் சுட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.