தமிழில் ரஜினிகாந்தின் ‘காலா’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’, சுந்தர் சி.யின் ‘அரண்மனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷ் அகர்வால். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் புடவையில் இருக்கும் புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, லாங் டிரைவ் போலாமா? என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களை லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.