Monday, June 5, 2023
No menu items!
Homeஇந்தியா செய்திகள்அம்ரித்பால் சிங் காதல் வலையில் சிக்கிய பெண்கள்- ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியதும் அம்பலம்

அம்ரித்பால் சிங் காதல் வலையில் சிக்கிய பெண்கள்- ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியதும் அம்பலம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவன் அம்ரித்பால் சிங் (வயது30). இவன் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறான். தன்னை ஒரு சீக்கிய மதகுரு என அறிவித்துக் கொண்ட அம்ரிபால் சிங் பஞ்சாப்பை பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என கோரி வருகிறான். சமீபத்தில் போலீஸ் நிலையத்தில் இவனும், ஆதரவாளர்களும் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் நுழைந்து போராட்டம் நடத்தியது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் அம்ரித்பால் சிங் தனி நாடு கேட்டு ஆதரவாளர்களுடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் நிலைமை கைமீறி போனதை உணர்ந்த பஞ்சாப் போலீசார் அவனை கைது செய்ய முடிவு செய்தனர். அவனை கடந்த சனிக்கிழமை முதல் தேடி வருகின்றனர். அவனது கூட்டாளிகள் 78 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

ஆனால் அம்ரித்பால் சிங் போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டான். 5 நாட்களாக அவனை தேடி கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அவன் இதுவரை எங்கு இருக்கிறான் என தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் அவனை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. பல்வேறு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அவன் இந்தியா வருவதற்கு முன்பு பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்றான் என்ற தகவலை உளவுத் துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் அவனை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

அம்ரித்பால்சிங் பிரிவினைவாத தலைவர் மட்டுமல்லாது ஒரு மன்மதராசாவாகவும் வலம் வந்துள்ள விவரம் இப்போது தெரியவந்துள்ளது. இவன் சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவன். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவனை ஏராளமான பெண்களும் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதில் திருமணம் ஆன பெண்கள் மட்டுமல்லாமல் கல்யாணம் ஆகாத பெண்களிடமும் அம்ரித்பால் சிங் காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதில் பல பெண்கள் இவனது காதல் வலையில் சிக்கி உள்ளனர். முதலில் அந்த பெண்களுடன் வீடியோகாலில் சாதாரணமாக பேசும் அவன் பின்னர் அவர்களை மயக்கி ஆபாச படத்தையும் வாங்கி உள்ளான்.

சில பெண்களுடன் அவன் நெருக்கமாக இருக்கும் படங்களும், சிலருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்களும் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. பல பெண்களிடம் அவன் நீண்டநேரம் வீடியோ காலில் பேசி உள்ளான். சிலருக்கு அவன் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்தான். ஒரு பெண்ணுக்கு அவன் நமது திருமணம் உறுதி ஆனதா? துபாயில் நமக்கு தேனிலவு நடக்கும் என்று மெசேஜ் அனுப்பி இருந்தான். அதற்கு அந்த பெண்ணும் சிரிப்பது போன்ற உருவ படத்தை பதிவிட்டாள். இப்படி தன்னிடம் மயங்கிய பெண்களின் ஆபாச படங்களும் அவனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது. அந்த புகைப் படங்களை வெளியிடுவேன் என மிரட்டி அவன் பெண்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments