Monday, December 4, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்வேப்பமூட்டில் உள்ள பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

வேப்பமூட்டில் உள்ள பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

பள்ளி மாணவ- மாணவி களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். கன்னியாகுமரி, சொத்த விளை பீச், குளச்சல் பீச், வட்டக்கோட்டை பீச் பகுதிகளில் சுற்றுலா பகுதிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வரும் நிலையில் குளிப்பதற்கும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். நாகர்கோவில் நகரை பொறுத்தமட்டில் பொது மக்களுக்கு பொழுது போக்கு அம்சமாக விளங்குவது நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள நகராட்சி பூங்கா ஆகும். இங்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து செல்கி றார்கள்.இதனால் சமீப காலமாக கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பூங்காவிற்கு வருவதற்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரு கிறது. ஆனால் பூங்கா வில் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து மோசமாக காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் அங்குள்ள செயற்கை நீர் ஊற்றுகளும் செயல்படாமல் உள்ளது. பொதுமக்கள் தங்களது பொழுதை கழிக்க வேண்டும் என்று பூங்காவிற்கு வரும் நிலையில் அங்கு போதுமான விளையாட்டு உபகரணங்கள் இல்லாத நிலையே உள்ளது.பூங்காவில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் ஆர்வமாக செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். மேலும் பூங்காவில் காதல் ஜோடிகளும் அதிகளவு வருவதால் குடும்பத்தோடு வரும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் வேப்பமூடு பூங்காவை பராமரிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய அனைத்து விளையாட்டு உப கரணங்களையும் அமைக்க வேண்டும்.தனியார் மூலம் அமைக்கப்பட்டுள்ள விளை யாட்டு உபகரணங்களில் அதிக கட்டணம் வசூலிக் கப்பட்டு வருகிறது. அந்த கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments