ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து பெற்றார். இந்நிலையில் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவனைக் கொஞ்சுகிறாள் மனைவி “வெட்கம் விடைகேட்குதே” என்கிறாள் “கொச்சையான சொற்கள் கொஞ்சம் செவிகேட்குதே” என்கிறாள் பாடல் பதிவைப் பாருங்கள் இயக்கம் ராஜசேகர் இசை ஜோகன் படம் 13ஆவது அட்சக்கோடு என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.