சென்னையில் நடைபெறவிருக்கும் ஆண்களுக்கான INDIUM AITA வீல்சேர் டென்னிஸ் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கலந்துகொள்ள இருக்கும் அண்டர்சன், செல்வ சிங்கசாது, குமார் ஆகியோருக்கு கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய முழு செலவு ரூ.25,000 வழங்கினார். விஜய் வசந்தின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.