விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள இயேசுவின் ஜீவநதி சபையில் இலவச தையல் பயிற்சி முகாம் போதகர் காலேப் தலைமையில் நடைபெற்றது. இந்த இலவச தையல் பயிற்சி முகாமில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.