இந்தியா விடுதலை பெற்ற பின்னர், திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக பல போராட்டங்கள் நடத்திய மார்ஷல் நேசமணியின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவுகளையும் பகிர்ந்தனர். இந்நிலையில், மார்ஷல் நேசமணிக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அஞ்சலி செலுத்தி உள்ளார். சுதந்திரப் போராட்ட வீரரும், கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க பல போராட்டங்களை முன்னின்று நடத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்கள் நினைவு நாளில் அன்னாருக்கு எனது நினைவஞ்சலி என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.