கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கிள்ளியூர் தொகுதியில் நட்டாலம், கொல்லஞ்சி, நல்லூர், உண்ணாமலைக்கடை, குழித்துறை ஆகிய இடங்களில் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார். நட்டாலத்தில் நேசர்புரம் பகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் கொல்லஞ்சி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ9.98 லட்சம் செலவில் கல்லுக்கூட்டம் நாகமூடு துணை சுகாதார நிலையத்திற்கு அருகே கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.
கல்லுக்கூட்டம் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் வைத்து இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்கிரஸ் இணைந்தனர். அதனை தொடர்ந்து நல்லூர் பகுதியில் சூசைபுரம், உண்ணாமலைக்கடையில் பம்மம், குழித்துறை நகராட்சியில் மார்த்தாண்டம் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்தும் கட்சி வளர்ச்சி மற்றும் காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது கிள்ளியூர் மேற்கு வட்டார தலைவர் என்.ஏ.குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ரத்தினகுமார், ஆரோக்கியராஜன், சிறுபான்மை பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர், கொல்லஞ்சி பஞ்சாயத்து தலைவி சலோமி, உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவி பமலா, குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ், நல்லூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நிர்மல் ராவண்டி, நட்டாலம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராபர்ட் ராஜ், கொல்லஞ்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிறிஸ்துராஜ், உண்ணாமலைக்கடை காங்கிரஸ் கட்சி தலைவர் ஜான் விக்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.