Tuesday, June 6, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்வடசேரி புதுக்குடியிருப்பு சுப்பையார்குளம் சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் ஆய்வு

வடசேரி புதுக்குடியிருப்பு சுப்பையார்குளம் சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் ஆய்வு

நாகர்கோவில் வடசேரி புதுக்குடியிருப்பில் சுப்பை யார் குளம் உள்ளது. இந்த குளத்தில் கழிவுகள் கொட்டப்பட்டு கழிவுநீரும் கலந்ததால் சுகாதார சீர்கேடு அடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. எனவே சுப்பையார் குளத்தை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை வெகு நாட்களாக இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து சுப்பையார் குளத்தை தூர்வார நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் இருந்து ரூ.47 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மேயர் மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

மழைக்காலத்திற்கு முன்னதாக குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்றும், குளத்தின் கரையை கட்டு வது, பொதுமக்கள் நடை பாதை மேற்கொள்ள வசதியாக குளத்தை சுற்றி அலங்கார தரை கற்கள் அமைக்கவும் மேயர் மகேஷ் அறிவுறுத்தினார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- சுப்பையார்குளத்தில் குப்பைகள் கொட்டப்படு வதால் குளம் மாசடைந்து காணப்பட்டது. இதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குளத்தில் கிடக்கும் சகதிகள் அனைத்தையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலமாக கழிவுகள் அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது.

குளத்தை சுற்றி சேதம் அடைந்துள்ள சுற்றுச்சுவரும் சீர மைக்கப்படும். ஏற்கனவே குளத்தில் கிடந்த ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டு உள்ளது. 14 ஆயிரம் யூனிட் சகதிகள் உள்ளன. அவற்றை அப்புறப்படுத்த நடவ டிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. குளத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் கிருஷ்ணன் கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீர் பைப் லைன் மூலமாக சுப்பையார் குளத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பைப் லைன்கள் ஏற்கனவே உள்ளன. அதன் மூலமாக தண்ணீர் விடப்படும். இவ்வாறு அவர் கூறி னார். ஆய்வின்போது மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், மாநகர செயலாளர் ஆனந்த், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஜெகன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சேகர், கலா ராணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments