Thursday, September 28, 2023
No menu items!
Homeஇந்தியா செய்திகள்நித்யானந்தாவின் பெண் தூதர்களிடம் ஏமாந்த அமெரிக்க எம்.பி.க்கள்- 'சிஸ்டர் சிட்டி' ஊழலில் பின்னணி தகவல்

நித்யானந்தாவின் பெண் தூதர்களிடம் ஏமாந்த அமெரிக்க எம்.பி.க்கள்- ‘சிஸ்டர் சிட்டி’ ஊழலில் பின்னணி தகவல்

சர்ச்சை சாமியார் நித்யானந்தா இந்தியாவில் உள்ள வழக்குகளில் தேடப்படும் நிலையில் வெளிநாடு தப்பி ஓடினார். அவர் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா நாடு என பெயர் சூட்டியதோடு அந்த நாட்டிற்கென தனி பாஸ்போர்ட், கொடி மற்றும் ரூபாய் நோட்டுகளையும் அறிவித்தார். அதோடு கைலாசா நாடு சார்பில் பல்வேறு நாடுகளுக்கான தூதர்கள் என பெண் தூததர்களையும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். குறிப்பாக கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக அறிவிக்கப்பட்ட விஜய பிரியா நித்யானந்தா சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அவரது பேச்சை ஏற்றுக் கொள்ள போவதில்லை என ஐ.நா. அறிவித்தது. இதற்கிடையே விஜய பிரியா நித்யானந்தா மற்றும் கைலாசா பிரதிநிதிகள் சிலர் அமெரிக்காவில் உள்ள நேவார்க் நகரத்துடன் ஒப்பந்தங்கள் செய்வதுபோல புகைப்படங்கள் கைலாசாவில் அதிகாரபூர்வ இணையதள பக்கங்களில் வெளியாகின. இதை வைத்து கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா அங்கீகாரம் அளித்துவிட்டது என கைலாசா பிரதிநிதிகள் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பினர். ஆனால் ஐ.நா. சபையில் கைலாசாவுக்கு ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து நித்யானந்தாவின் கைலாசா, அமெரிக்காவில் சில நகரங்களில் மோசடியில் ஈடுபட்டதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நேவார்க் நகரம்-கைலாசா இடையே இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நித்யானந்தா சீடர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் உள்ள சமூகங்களுக்கும் மற்ற நாடுகளில் உள்ள சமூகங்களுக்கும் இடையே உள்ள பல்வேறு கலாச்சாரங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிஸ்டர் சிட்டிஸ்’ என்ற அமைப்பின் படி இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற ஒப்பந்தங்களை பயன்படுத்தி கைலாசாவை தனி நாடாக கட்டமைக்கும் முயற்சிகளை அறிந்த நேவார்க் நகர மேயர் கைலாசாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்தார்.

கைலாசாவால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறிய நேவார்க் நகர மேயர் ரஸ் பராக்கா நேர்வார்க் நகரம் மோசடிக்கு பலியாகிவிட்டது என்றும் கூறி இருந்தார். இந்நிலையில் நேவார்க் போலவே விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் நகரம், ஒஹையோ மாகாணத்தில் உள்ள டேட்டன் நகரம், புளோரிடாவில் உள்ள பியூனா பார்க் நகரம் உள்பட அமெரிக்காவில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட நகரங்களுடன் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா ஒப்பந்தங்கள் செய்துள்ளதாக பாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கைலாசா தொடர்பான தகவல்களை சரிபார்க்காமல் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாகாணங்களில் மேயர், நகராட்சி கவுன்சில் உள்பட தன்னாட்சி அரசும் போலியான கைலாசா நாட்டிடம் ஏமாந்துள்ளதாகவும் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி குற்றம் சாட்டி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க நித்யானந்தாவின் பெண் தூதர்கள் மேலும் பல நகரங்களை அணுகி ஒப்பந்தம் செய்ய வற்புறுத்தியதும் அம்பலமாகி உளளது. இதுகுறித்து வடக்கு கரோலினாவை சேர்ந்த ஜாக்சன்வில் என்பவர் கூறும் போது, கைலாசாவுடனான எங்கள் பிரகடனங்கள் ஒரு அங்கீகாரம் அல்ல. அவை கோரிக்கைக்கான பதில் மட்டுமே. அவர்கள் கொடுத்த தகவல்களை நாங்கள் சரிபார்க்கவில்லை என்றார். மேலும் கலிபோர்னியாவே சேர்ந்த நார்மாடோரஸ், ஒகியோவை சேர்ந்த டிராய்ட் பால்டர்சன் ஆகிய 2 எம்.பி.க்கள் கைலாசா பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதன் பேரிலேயே இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது கைலாசாவு டனான ஒப்பந்தத்தை நேவார்க் நகரம் ரத்து செய்ததை தொடர்ந்து மற்ற நகரங்களும் தங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments