Monday, June 5, 2023
No menu items!
Homeஇந்தியா செய்திகள்சொந்த கட்சிக்காரர்களையே வீழ்த்த சதி செய்தவர் உத்தவ் தாக்கரே:ஏக்நாத் ஷிண்டே குற்றச்சாட்டு

சொந்த கட்சிக்காரர்களையே வீழ்த்த சதி செய்தவர் உத்தவ் தாக்கரே:ஏக்நாத் ஷிண்டே குற்றச்சாட்டு

உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேத் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினார். இந்தநிலையில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி சார்பில் அதே இடத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்டார். இதில் முதல்-மந்திரி ஷிண்டே உத்தவ் தாக்கரேவை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தனது சொந்த கட்சியினரின் அரசியல் வாழ்க்கையை அழிக்க மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து சதி செய்த ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை. நான் துரோகி இல்லை, சுயமரியாதை உள்ளவன். எங்களை துரோகிகள் என்று சொல்ல உத்தவ் தாக்கரேவுக்கு உரிமை இல்லை. கஜானன் கீர்த்திகர், ராம்தாஸ் கதம் போன்ற மூத்த தலைவர்கள் சிவசேனாவை வலுப்படுத்த பாலாசாகேப்புடன் தோளோடு, தோள் நின்று உழைத்தனர். ஆனால் நீங்கள் அவர்களை துரோகிகள் என்று கூறுகிறீர்கள். நாங்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதற்கும் ஒரு வரம்பு உள்ளது.

நான் வீட்டில் உட்கார்ந்துகொண்டு உத்தரவு போடும் முதல்-மந்திரி அல்ல. நெருக்கடியான நேரத்தில் களத்தில் இறங்குவேன். 2 முறை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளேன். நான் எப்போதும் களத்தில் உழைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னை துரோகி என்று அழைக்கிறீர்கள். உத்தவ் தாக்கரே பாலாசாகேப் தாக்கரேவின் சொத்துகளுக்கு வாரிசாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசிடம் அடகு வைத்த சித்தாந்தத்திற்கு அவர் வாரிசு இல்லை. நான் பாலாசாகேப்பின் சித்தாந்தம் மற்றும் மரபின் வாரிசு. பாலாசாகேப் பால் தாக்கரே தனது தந்தையாக இருப்பதை விட மிகவும் பெயரிவர் என்பதை உத்தவ் தாக்கரே அறிந்துகொள்ள வேண்டும். எனக்கு உங்கள் சொத்துக்கள் வேண்டாம். பாலாசாகேப் உங்கள் தந்தையாக இருக்கலாம். ஆனால் அனுதாபத்தை பெறுவதற்காக அதைப்பற்றி கூறிக்கொண்டே இருக்காதீர்கள். மாநில தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத, தனது கட்சிக்கு கூட பொறுப்பேற்க முடியாத ராகுல் காந்தி அல்லது தேசபக்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி இதில் யார் வேண்டும் என்பதை சிவசேனா தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே பேசினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments