Tuesday, June 6, 2023
No menu items!
Homeஉலக செய்திகள்அந்தரங்கம் வெளியானதால் சிக்கலில் 'டிரம்ப்'

அந்தரங்கம் வெளியானதால் சிக்கலில் ‘டிரம்ப்’

அப்படியிருந்தும் அவரோடு உல்லாசமாக இருப்பதில் எனக்கு சந்தோசமே. ஏனெனில் அவர் அமெரிக்காவின் அதிபர். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று அமெரிக்காவின் பிரபல ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல் சர்வ சாதாரணமாக சொல்லி சென்று விட்டார். அகப்பட்டவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் அல்லவா! டிரம்ப் என்றாலே வம்புக்கு பஞ்சமில்லாத மனிதர் என்றே சொல்ல வேண்டும். அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே வேலை என்று அதிரடியாக பேசி தேர்தலில் வெற்றிபெற்று 2016-ல் அதிபர் ஆனார். உலக அளவில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் டிரம்புக்கு மீண்டும் அதிபர் ஆக ஆசை ஏற்பட்டுள்ளது.

இதற்காக அவர் தயாராகி வரும் நிலையில் தான் அவர் பெண் மீது வைத்த ஆசையும், அதற்காக வாரி இறைத்த பணமும் இப்போது அவருக்கு எதிரியாகி உள்ளது. தேர்தலில் போட்டியிட்ட காலத்தில் அழகி ஸ்டோர் மியுடன் வைத்திருந்த தொடர்பு வைரலாகி கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அப்போது ஸ்டோர்மியை பேசவிடாமல் தடுப்பதற்காக 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வாரி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடியே 5 லட்சத்து 82 ஆயிரத்து 906 ரூபாய் வழங்கி இருந்தாராம். இந்த குற்றச்சாட்டு எழுந்தாலும் அதிபரானதால் அமுங்கிப்போனது. இப்போது அதிபராக ஆசைப்படும் நேரத்தில் அந்த விவகாரம் குறுக்கே வந்துள்ளது.

வரி மற்றும் வங்கி மோசடி உள்ளிட்ட கூட்டாட்சி பிரசார நிதி சட்டங்களை மீறியதாக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. அந்த கிரிமினல் வழக்கில் டொனால்டு டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் டிரம்பே தெரிவித்து இருப்பதுதான் பரபரப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) மன்ஹாட்டன் மாவட்ட வக்கீல் (டிஏ) அலுவலகத்தில் சரணடைவார் என்றும் அவரது வக்கீல் ஜோ டகோபினா தெரிவித்தார். சரணடைந்து விவகாரத்தை முடித்துவிட்டு வெளியே வந்துவிடலாம் என்று நினைத்த நேரத்தில் ஆபாச நாயகியுடனான அந்தரங்க லீலைகளை அந்த நாயகி வெளிப்படையாகவே தெரிவித்து இருப்பது புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

2006 ஜூலை மாதம் நடந்த கோல்ப் போட்டியின் போது நான் டிரம்பை சந்தித்தேன். அப்போது அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் பிரபலமாக இருந்தார். அப்போது எனக்கு வயது 27. ஆனால் டிரம்பின் வயது 60. அந்த நேரத்தில் தான் டிரம்பின் 3-வது மனைவி மெலனியாவுக்கு மகன் பரோன் பிறந்து 4 மாதங்கள் ஆகி இருந்தது. அவரது மெய்க்காப் பாளர்கள் என்னை பென்ட் அவுஸ் விடுதிக்கு இரவு விருந்துக்கு அழைத்து சென்றார்கள். அன்றுமுதல் டிரம்புடன் எனது உறவு தொடங்கியது. நான் நடந்தவைகளை பற்றித்தான் முழுமையமாக வெளிப்படுத்தி புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். எனக்கு டொனால்டு டிரம்பை பார்த்து பயமில்லை. அவரை நிர்வாணமாகவே பார்த்தவள் நான். எனவே இப்போது அவர் ஆடையுடன் வந்து என்னை பயமுறுத்த முடியாது.

டொனால்டு டிரம்ப் ஏற்கனவே ஒரு கலவரத்தை தூண்டிவிட்டு மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தியவர். அவர் தற்போது கைது செய்யப்பட்டாலும் அல்லது விளைவு எதுவாக இருந்தாலும் அது வன்முறையை ஏற்படுத்தப் போகிறது இவ்வாறு அவர் கூறினார். ஒன்றா? இரண்டா? டிரம்புக்கு பெண்களுடனான சகவாசம் பற்றி எடுத்துச் சொல்ல…? இப்போது டிரம்புக்கு 76 வயதாகிறது. தைரியமாக அவர் மீது புகார் சொன்ன நடிகைகளின் பெயர் பட்டியலே 19 என்கிறார்கள். ஜெசிகா டிரேக். இவரும் ஒரு ஆபாச நடிகைதான். இவர் டிரம்புடனான நெருக்கம் பற்றி கூறியதாவது:- கலிபோர்னியாவில் உள்ள லேக் தகூவில் நடந்த கோல்ப் போட்டியின் போது நான் டொனால்டு டிரம்பை முதல்முதலாக சத்தித்தேன். அவர் என்னுடன் கடலை போட்டார். ஜொள்ளு விடுகிறார் என்பதை புரிந்து கொண்டேன். கோல்ப் மைதானத்தில் தன்னுடன் சேர்ந்து நடந்து வருமாறு சொன்னார். பிறகு என்னை அவருடைய ஓட்டல் ரூமுக்கு அழைத்தார். நான் 2 பெண்களுடன் சென்றேன். ஓட்டல் அறையில் டிரம்ப் என்னையும் மற்ற 2 பெண்களையும் பார்த்ததும் மூவரையும் இழுத்து பிடித்து கட்டிப்பிடித்தார். எங்களின் அனுமதி இல்லாமலேயே எங்களை முத்த மிட்டார். காதல் போதை அவரது கண்களில் தெரிந்தது. தனது அறைக்கு வருமாறும், எவ்வளவு பணம் வேண்டும் என்றும் கேட்டார். மறுபடியும் போன் செய்து தன்னுடன் பார்ட்டிக்கு வந்தால் 10 ஆயிரம் டாலர் மற்றும் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள என்னுடைய வீட்டிற்கு அவரின் விமானத்தில் செல்லலாம் என்று சொன்னார். இவ்வாறு அவர் கூறினார். ஆசை வெட்கம் அறியாது என்பார்கள். அந்த மன நிலையில் தான் டிரம்ப் இருந்திருக்கிறார். ஆபாச பட நாயகிகளுக்கு ஏது வெட்கம். “அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன். அவன் பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…” என்று கண்ணதாசன் பாடியது போல் நிஜத்தில் அந்த வயதிலும் ஆடி கூடி கலந்திருக்கிறார். அந்த அந்தரங்கங்கள் இப்போது அரங்கத்துக்கு வந்திருப்பதால் டிரம்ப் என்ற ஆண் சிங்கம் (அ)சிங்கம் ஆகி நிற்கிறது. டிரம்ப் புளோரிடாவில் இருந்து இன்று நியூயார்க் செல்கிறார். அங்கு இரவு டிரம்ப் டவரில் தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகலில் மன்ஹாட்டன் நகருக்கு சென்று கோர்ட்டில் சரண் அடைய போவதாக கூறப்படுகிறது. டிரம்ப் வருவதால் கோர்ட்டில் மற்ற வழக்குகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டத்துக்கும் தயாராகி வருகிறார்கள். நிலைமையை சமாளிக்க போலீஸ் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments