ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்தவர் ஏசுதாசன். இவரது மனைவி ஜெயா (வயது 49). இவர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் ஏசுதாசனை கடந்த 9-ந்தேதி அன்பு, விஜயன், மணிக ண்டன், தங்கஜோஸ் ஆகியோர் கொலை செய்து விட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்து ள்ளனர். கைது செய்யப்ப ட்டவர்களுக்கு ஆதரவாக ஆரல்வாய்மொழி போலீசார் செயல்பட்டு வருகிறார்கள். என்னையும், எனது குடும்பத்தினரையும் தொட ர்ந்து போலீசார் துன்புறுத்தி வருகிறார்கள்.எனவே அவர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகன்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். எனது கணவர் கொலை வழக்கில் உடனடி யாக குற்றப்ப த்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர்கள் வெளியே வந்தால் எனது குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்படும். எனது மகனையும் கொலை செய்து விடுவார்கள். ஆகவே அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடி க்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.