வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்பட்ம் வெளியான 2 நாட்களில் ரூ.8 கோடிக்கு மேல் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள இயக்குனர் வெற்றிமாறன், பட குழுவினர் அனைவருக்கும் தங்க காசு வழங்கியுள்ளார். இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.