Wednesday, December 6, 2023
No menu items!
Homeஉலக செய்திகள்நோயை விட சிகிச்சை கடுமையாக இருக்க கூடாது: எலான் மஸ்க்

நோயை விட சிகிச்சை கடுமையாக இருக்க கூடாது: எலான் மஸ்க்

2019 வருட இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா எனும் வைரஸ் தொற்று, 2020ல் உலகம் முழுவதும் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தை நலிவடைய செய்து லட்சகணக்கானவர்களை பலி வாங்கியது. இதனை எதிர்கொள்ள இந்தியா உட்பட பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து அவற்றை அந்தந்த நாட்டு மக்கள் கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தின. விருப்பமில்லையென்றாலும் அரசாங்கங்கள் கட்டாயமாக்கியதால் மக்கள் சில மாதகால இடைவெளிகளில் ஒன்றன் பின் ஓன்றாக செலுத்தி கொண்டனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறைந்து வருவதாகவும் சில நாடுகள் அதனை உபயோகிப்பதையே நிறுத்தி விட்டதாகவும் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிலளித்த எக்ஸ் நிறுவனத்தின் அதிபரும், உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாவது: மக்கள் கட்டாயமாக தடுப்பூசிகளையும் பூஸ்டர்களையும் செலுத்தி கொள்ள வேண்டும் என அரசாங்கங்கள் கட்டாயபடுத்தியதை நான் நாகரிகமற்ற அத்துமீறலாக கருதுகிறேன். அதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் எனக்கு விருப்பமில்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பதால் ஒரு நல்ல ஊழியரை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக நானே சிறைக்கு சென்றிருப்பேன். அது மட்டுமல்ல; நானும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டேன். நோயினால் ஏற்பட்ட உடல்ரீதியான சிக்கலை விட தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு பலருக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டன. நோய் தடுப்புக்கான தடுப்பூசி, நோயை விட கடுமையான விளைவுகளை தர கூடாது. இவ்வாறு மஸ்க் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments