நாகர்கோவில் அருகே உள்ள கலைநகர் பிள்ளை யார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 27) இவர் சுசீந்திரம் பைபாஸ் ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பிரபு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடைக்கு வந்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேஜையில் இருந்த ரூ.23 ஆயிரம் மற்றும் ரூ. 55 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பிரபு சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையன் ஒருவன் தலையில் தொப்பியுடன் முககவசம் கையுறை அணிந்து பூட்டை உடை ப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 22 -ந் தேதி மணக்குடி பகுதியில் டாக்டர் வீட்டிலும் வாலிபர் ஒருவர் இதே போல் முக கவசம் கையுறை அணிந்து கைவரிசை காட்டியிருந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. எனவே இந்த இரண்டு கொள்ளையிலும் ஈடுபட்டது ஒரே கொள்ளையனாக இருக்கலாம் என்று போலீ சார் சந்திக்கிறார்கள். கொள்ளையனை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர்.