Wednesday, December 6, 2023
No menu items!
Homeஉலக செய்திகள்அப்போது பயங்கரவாதிகள்.. இப்போது? பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

அப்போது பயங்கரவாதிகள்.. இப்போது? பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பல வருடங்களாக இந்தியாவிற்கெதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான், தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றால் அங்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது.

சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாததால் பலர் அங்கு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்த பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் கும்பல் கும்பலாக ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் சட்டவிரோதமாகவும் சட்டரீதியாகவும் உள்ளே நுழைந்து அங்கேயும் பிச்சை எடுப்பதில் ஈடுபடுகின்றனர்.

அரபு நாடுகள் பலவற்றில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவது அங்கு வழக்கம். அவ்வாறு சிறையிலடைக்கபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து அந்நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்களே அதிகம் பயணம் செய்கின்றனர். இவர்கள் வருகையை தடுக்க நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியாவும், ஈராக்கும் பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்துள்ளன. புத்திசாலித்தனமான வழிமுறையை அவர்கள் கையாண்டு உள்ளே வருவதால் தடுப்பதற்கு அந்த நாடுகள் திணறுகின்றன. சட்ட ரீதியாக அங்கு நுழைய முயல்பவர்கள், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ‘உம்ரா விசா’ எனும் அனுமதியை பெற்று அங்கு நுழைகிறார்கள். வந்தவுடன் சாலைகளில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இது தவிர இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா இருக்கும் சாலைகளில் பிக்பாக்கெட் குற்றத்தில் ஈடுபடும் பெரும்பகுதியினரும் பாகிஸ்தானியர்களே எனவும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. உலக அரங்கில் பாகிஸ்தானை இது தலைகுனிய செய்திருக்கிறது. ஒரு காலத்தில் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்து வந்த பாகிஸ்தான், தற்போது பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்வதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments