நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டு பகுதியான வண்ணான்விளை பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள், பகுதி செயலாளர் ஜீவா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.