சென்னை அண்ணா நகரில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற சனாதன உத்சவ் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக் கொண்டார். Powered By அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- சனாதன தர்மத்தின் மிகவும் முக்கியமான பகுதியாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இடங்கள், சனாதன தர்மத்தின் சான்றுகளாக உள்ளது. சனாதனத்தில் ஏற்றத்தாழ்வு கிடையாது. சனாதனம் தமிழகத்தில் வளம்பெற்று இருந்தது. சனாதன தர்மத்தின் அடிப்படை கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளது. சனாதன தர்மம் உலகிற்கு தேவையானது. இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.