Tuesday, June 6, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை

உலக நாடுகளையே உலுக்கிய கொரோனா இந்தியாவையும் புரட்டி போட தவறவில்லை. 2021-ல் 2-வது அலை மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை, மருந்து பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அரசின் தீவிர நடவடிக்கை, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா மறைந்த நிலையில் மக்கள் நிம்மதி அடைந்து சகஜ நிலைக்கு திரும்பினார்கள். ஆனால் இந்த வைரஸ் முற்றிலும் மறைந்து விடாமல் இந்தியாவில் பரவும் நிலையை மீண்டும் அடையலாம் என்று அப்போதே நிபுணர்கள் கூறியது போல் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவ தொடங்கி உள்ளது.

அதிலும் அசுர வேகத்தில் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 918 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 350 பேர் வீடுகளில் தனிமைபடுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் நாடு முழுவதும் மத்திய அரசு உஷார்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டிலும் நேற்று 76 பேருக்கு தொற்று ஏற்பட்டது உறுதியாகி இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு இன்று அவசர ஆலோசனை நடத்தியது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவற்கான விதிமுறைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- கொரோனா சற்று உயர்ந்தாலும் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பயப்பட தேவை இல்லை. கொரோனா கட்டுப்பாட்டை ஒவ்வொரு வரும் கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற பழக்கங்களை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments