Friday, June 2, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்திங்கள் நகரில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

திங்கள் நகரில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை யின் சார்பில் புகைப்படக் கண்காட்சி திங்கள் நகரில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி. திட்டம், நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை முதல்வர் தேரில் பார்வையிட்டது. இன்னுயிர் காப்போம் நம் மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங் கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட் டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது. மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது. முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் திட்டம். புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரி சுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கியது. காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள் திங்கள்நகரில் காட்சிப்படுத் தப்பட்டது. பல்வேறு திட்டங் கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர் புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண் காட்சி யினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments