சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோனஸ், கேட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கொண்டாடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள விழாக்களுக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.