Monday, December 4, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்கந்து வட்டி புகார் மீது கடும் நடவடிக்கை-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

கந்து வட்டி புகார் மீது கடும் நடவடிக்கை-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 5 வகையான வழக்குகள் பதிவாகின்றன. வேலை வாய்ப்பு மோசடி, வெளிநாட்டில் வேலை என கூறி ஏமாற்றுதல் தொடர்பாக 400 புகார்களும், பணமோசடி குறித்து 796 வழக்குகளும், நிலஅபகரிப்பு தொடர்பாக 400 வழக்குகளும், வரதட்சணை கொடுமை மற்றும் அது சம்பந்தமான வழக்குகள் 100, அடிதடி மற்றும் அரிவாள் வெட்டு வழக்குகள் 580 பதிவாகி உள்ளது.

இதில் தக்கலை சப்-டிவிஷனில் 200 வழக்குகளும் குளச்சல் சப்-டிவிஷனில் 150 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். குற்றங்கள் நடைபெறும் முன்பே தடுப்பது என முடிவு செய்து இதற்கு தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு குறித்த விளம்பரங்கள் வந்தால் அதன் உண்மை தன்மையை அறிய விளம்பரம் வந்த அன்று போலீசார் நேரில் விசாரித்து மோசடியென தெரிந்தால் உடனே நடவடிக்கை மேற்கொள்வார்கள். குமரி மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

13 ஆயிரத்து 900 வழக்குகளில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளோம். இதில் 9,700 வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன. மேலும் 4000 வழக்குகள் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்துவிடும். பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 10,716 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 8000 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளது. 2000 மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தால் உரிமையா ளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கந்துவட்டி கொடுமை தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நேரில் புகார் அளிக்கலாம். இது வரை குமரி மாவட்டத்தில் 3 கந்து வட்டி வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. குமரி மாவட்டத்தில் அங்கீ காரம் இல்லாமல் செயல் படும் இயற்கை மையங்கள், மசாஜ் கிளப்புகள் குறித்து பொது மக்கள் புகார் அளிக்கலாம். அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்ப டும். இதற்காக பொது சுகாதாரதுறை இணை இயக்குனர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோருடன் இணைந்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள 33 போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments