Friday, June 2, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்நீர் மேலாண்மை - மண் வளம் குறித்து எஸ்.ஆர்.எம். வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி

நீர் மேலாண்மை – மண் வளம் குறித்து எஸ்.ஆர்.எம். வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி

செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டை வேந்தர் நகரில் இயங்கி வரும் எஸ். ஆர். எம். வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி (ஹானஸ்) வேளாண்மை, பி. எஸ்சி (ஹானஸ்) தோட்டக்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் 268 பேர் கல்லூரி வேளாண் மற்றும் தோட்டக்கலை பாட திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கி வேளாண் பணிகளை அறிந்து கொள்ளும் விதமாக பயிற்சி முகாம் நடைபெற்றது. மதுராந்தகம், அச்சரப்பாக்கம், சித்தாமுர், ஓரத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3 மாதம் 26 குழுக்களாக தங்கி வேளாண்மை துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் சாகுபடி பணிகள், நீர் மேலாண்மை, மண் வளம் உள்ளிட்ட வேளாண் பணிகள் பற்றி பயிற்சி பெற்றனர். முகாம் நிறைவு விழா கல்லூரி டீன் எம். ஜவஹர்லால் தலைமையில் நடைபெற்றது. எஸ்.ஆர்.எம். சமூக அறிவியல் துறை தலைமை பேராசிரியர் ஏ. அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். துணை பேராசிரியர் ஆர். ராஜசேகரன் கிராம வேளாண் பணி அனுபவங்கள், கண்காட்சி பற்றி விளக்கி கூறினார்.

எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஆர்.நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆர்.அசோக் கவுரவு விருந்தினராக பங்கேற்று வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு அரசு துறைகளில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் பற்றி பேசினார். இதில் வேளாண் உதவி இயக்குனர் அருள் பிரகாசம், தோட்டக்கலை அலுவலர் திரிபுராசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியை எஸ். ஆனந்தி நன்றி கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments