கன்னியாகுமரி பகவதிஅம்மன்கோவிலில் மாதந்தோறும்பவுர்ணமி தினத்தன்று பகவதி அம்ம னுக்கு வைர கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தமாசி மாதபவுர்ணமியையொட்டி நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அதிகாலை 4-30மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6மணிக்கு உஷ பூஜையும் உஷ தீபாராதனையும் நடந்தது. அதன் பிறகு நிவேத்தியபூஜையும் ஸ்ரீபலிபூஜையும்நடந்தது.
அதன்பின்னர் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், பஞ்சா மிர்தம், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு வைரக் கிரீடம் மற்றும் வைரக்கல் மூக்குத்தி மற்றும்தங்க ஆபரணங்கள்அணிவிக்கப் பட்டு சந்தனகாப்புஅலங்கா ரத்துடன்அம்மன்பக்தர்களு க்குஅருள்பாலி க்கும்நிகழ்ச்சி நடந்தது.பின்னர் உச்சி கால பூஜையும், உச்சிக்கால அலங்காரதீ பாராதனையும்நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம்செய்தனர்.மாலை6-30மணிக்கு சாயரட்சைதீபாராதனையும் இரவு7மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடந்தது.அதன் பிறகு அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின்உள் பிரகாரத்தைசுற்றி மேளதாளம் முழங்க3முறை வலம் வரச்செய்தநிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு வெள்ளிசிம்மாசனத்தில் அம்மனுக்குதாலாட்டுநிகழ் ச்சியும்அதைத்தொடர்ந்து அத்தாழபூஜையும்ஏகாந்த தீபாராதனையும்நடந்தது. இந்த மாசி மாதபவுர்ணமி வழிபாட்டில்கன்னியாகுமரி சட்டமன்றதொகுதிஎம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்கானஏற்பாடுகளை கன்னியாகுமரிபகவதிஅம் மன்கோவில்நிர்வகத்தினர் செய்துஇருந்தனர்.