பாகிஸ்தானில் சீக்கியர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். பெஷாவரின் ரஷித்கர்ஹி பஜாரில் மன்மோகன் சிங் என்ற சீக்கியர் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் மன்மோகன் சிங்கை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். கடையை மூடி விட்டு மன்மோகன் சிங் வீட்டுக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு குழந்தை, வயதான பெற்றோர், ஒரு சகோதரி, ஒரு மாற்று திறனாளி சகோதரர் உள்ளனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் பெஷாவரில், தர்லோக் சிங் என்ற சீக்கியர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.