அலியாபட் மற்றும் ரன்பீர் கபூர் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் இடம்பெற்ற கேசரியா பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சீக்கிய இளைஞரான சினேதீப் சிங் கல்சி என்பவர் கேசரியா பாடலை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 வெவ்வேறு மொழிகளில் அழகாக பாடியுள்ளார்.
அவர் தனது இதயத்தை உருக்கும் குரலால், ஒவ்வொரு மொழியும் உச்சரிப்புடன் பாடிய பாடல் இணையதளத்தில் கேட்பவர்களை மிகவும் ரசிக்க செய்துள்ளது. இந்த பாடல் வீடியோவை பிரதமர் மோடி அருமையான தலைப்புடன் பகிர்ந்துள்ளார். அதில், திறமையான @SnehdeepSK என்பவரின் இந்த அற்புதமான தொகுப்பை கண்டேன். மெல்லிசைக்கு கூடுதலாக இது ‘ஏக்பாரத் ஷ்ரேஷ்டா பாரத்’ என்ற உணர்வில் சிறந்த வெளிப்பாடு என கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் இந்த பதிவு இணையதளத்தில் 279 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.