தமிழக கவர்னர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதற்காக ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு மற்றும் கோவளம் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் நேற்று மாலை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வக்கீல் வெற்றிவேல் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாலசு ப்பிரமணியம் முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு சிறப்பு விரு ந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், குமரி மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் பிச்சுமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.