கேரளாவில் அரசு ஊழியர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் நாளையுடன் ஓய்வு பெறுகிறார்கள். அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் அவர்களின் பணப்பலன்களை அரசு உடனே வழங்க வேண்டும். அந்த வகையில் ஓய்வு பெறும் சுமார் 10ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு ரூ.1500 கோடி அளவுக்கு பணம் வழங்க வேண்டும். இதுபோல இந்த ஆண்டில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஏற்கனவே அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பண பலன்களை வழங்க வேண்டும் என்பதால் அரசு ரூ. 2 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.