Tuesday, September 26, 2023
No menu items!
HomeUncategorizedஏலியன்களை கண்டறிய விஞ்ஞானிகள் புதிய முயற்சி- சமிக்ஞையை கண்டுபிடிக்க கருவியை உருவாக்கிய மாணவர்

ஏலியன்களை கண்டறிய விஞ்ஞானிகள் புதிய முயற்சி- சமிக்ஞையை கண்டுபிடிக்க கருவியை உருவாக்கிய மாணவர்

இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா? மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா? என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. வேற்று கிரகவாசிகளான ஏலியன்கள் இருப்பது உண்மையா? அல்லது பொய்யா? என்பது, இன்றுவரை நிரூபிக்கப்படாமல் உள்ளது. ஆனால் ஏலியன்கள் இந்த பால்வெளி அண்டத்தில் வேறு எங்கேனும் நம்மை விட அதிபுத்திசாலிகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஏலியன்களின் செயல்பாடுகள் குறித்து இதுவரை பல ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் தங்களது மூளையை கசக்கியபடி கண்களை விரித்துதங்களது ஆராய்ச்சி பயணத்தை தொடங்கி உள்ளனர். ஆனால் ஏலியன்கள் பற்றி இதுவரை எந்த உறுதியான தகவல்களும் வெளிஉலகுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏலியன்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்கள்.

கற்பனை கதாபாத்திரங்களாகவும், ஹாலிவுட் படத்திலும் கற்பனையாக வலம் வரும் வேற்றுக்கிரகவாசிகள் பால்வெளியில் எங்கேனும் இருப்பதற்கு சாத்தியமான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றே பெரும்பாலான விஞ்ஞானிகள் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஏலியன்கள் சிக்குவார்களா என்று வலை வீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் ஏலியன்கள் இருப்பதை உறுதிப்படுத்த ஒரு வழி இருப்பதாக அமெரிக்காவில் உள்ள கர்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பட்டதாரி மாணவர் அக்ஷய் சுரேஷ் தெரிவித்து உள்ளார். ஏலியன்களை கண்டறிய சமிக்ஞைகள் தான் முதல் வழி என்றும் அந்த சமிக்ஞைகளை கொண்டு ஏலியன்களை அறியலாம் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது, வானில் உள்ள பால்வெளி அண்டத்தில் பல நட்சத்திர குடும்பங்கள் உள்ளன. அந்த நட்சத்திர குடும்பங்களில் அதிக நியூட்ரான்களை, அலையாக வெளியேற்றும் சக்தி கொண்ட நட்சத்திரங்களும் உள்ளன. அவை சக்திவாய்ந்த கதிர்களை வெளியிட்ட வண்ணமே இருக்கும். நட்சத்திர கூட்டத்தின் நடுவில், அலைகள் வெளிவருகிறது. இவை எப்.எம். அலைகளை விட 10 மடங்கு சிறியவை. நீண்ட தூரம் பயணிக்கும் அந்த அலைகள் அதிக காந்த தன்மை கொண்டதாக இருக்கிறது. பால் வெளி அண்டத்தில் ஏலியன்கள் இருந்தால், அவை மற்ற கிரகத்திற்கு செய்தி சொல்ல முயற்சி செய்யும். அப்போது இதுபோன்ற அலைகளை வெளியிடும். இந்த அலைகளை கொண்டு ஆய்வு செய்வதின் மூலம் ஏலியன்கள் பால்வெளி அண்டத்தில் உள்ளதா என்பதை கண்டறியலாம்.

இந்த அலைகளை உள்வாங்க ஒரு கருவியை கண்டறிந்துள்ளேன். இதன் மூலம் ஏலியன்ஸ்களை தொடர்பு கொள்ள முடியும் என்றும் உறுதியாக தெரிவித்து உள்ளார். எனவே விரைவில் ஏலியன்கள் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏலியன்கள் வருகையை விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். ஆனால் ஏலியன்கள் குறித்து மறைந்த புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும்போது, வேற்றுக்கிரகவாசிகளைத் தேடி நாம் சிக்னல் அனுப்புவது அவ்வளவு நல்லதல்ல. நம் சிக்னல்களைக் கண்டுபிடித்து நம் உலகுக்கு அவர்களால் வரமுடிந்தது என்றால், அவர்கள் நம்மை விடத் தொழில்நுட்பங்களில் பல மடங்கு முன்னேறியவர்களாகவே இருப்பார்கள். அப்படியொரு கூட்டத்தை எதிர்த்து நிற்கும் அளவுக்கு நாம் இன்னமும் வளரவில்லை. அப்படிச் செய்வது ஆபத்து தான் என்று எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments