16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் தரம்சாலாவில் இன்று நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ல் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னும், அதர்வா தாயீட்19 ரன்னிலும், ஷிகர் தவான் 17 ரன்னிலும், லிவிங்ஸ்டோன் 9 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் பஞ்சாப் அணி 50 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது. 5வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா ஜோடி 64 ரன்கள் சேர்த்த நிலையில், ஜிதேஷ் சர்மா 44 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 49 ரன்னும், ஷாருக் கான் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.