முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தனது கொளத்தூர் தொகுதியிலும் அவர் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. மேலும், வழக்கமான மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டியது இருந்தது. எனவே அவர் நேற்று மாலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளார்.