Tuesday, June 6, 2023
No menu items!
Homeஇந்தியா செய்திகள்காற்றுமாசால் குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்படும் அபாயம்- விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

காற்றுமாசால் குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்படும் அபாயம்- விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுப் புகைகளால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் சுத்தமான காற்று கிடைப்பது அரிய பொருளாக மாறி வருகிறது. இதன் விளைவாக நுரையீரலில் அதிக மாசு ஏற்படுகிறது. இது முக்கியமாக குழந்தைகளை பாதிக்கிறது. குழந்தைகள் வளரும் நிலையில் அவர்களின் சுவாசம் மற்றும் நரம்பு மண்டலங்களை சேதப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது. காற்று மாசுபாடு குறைந்த பகுதியில் உள்ள குழந்தைகளின் நுரையீரல் திறன் மேம்பட்டுள்ளது என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

காற்று மாசுபாடு அதிகமாக இருந்தால், குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி குறைகிறது. ஆஸ்துமா ஆபத்து அதிகரிக்கிறது. குழந்தை பருவத்தில் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் மாசுபட்ட காற்றை அதிகமாக சுவாசிப்பதால் அவர்களுக்கு முன்கூட்டியே குழந்தை பிறக்கலாம். குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம். உலகளவில் ஆண்டுதோறும் 7 லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்றினால் ஏற்படும் குறைந்த சுவாச பாதை நோய்த்தொற்றுகளால் இறக்கின்றனர். குழந்தை பருவத்தில் அதிக அளவு காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு முதிர்ந்த வயதில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைந்துள்ளதாக கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 2002-04-ம் ஆண்டை விட 2016-19 ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நல்ல காற்றின் தரம் உள்ள பகுதிகளில் இளைஞர்களின் நுரையீரல் செயல்பாடு மேம்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. மாசு பாதிப்பை சிறிதளவாவது குறைக்க முடிந்தாலும் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டு குழந்தை பருவத்தில் இருந்து இளமைப் பருவம் வரை வளர்ச்சி காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments