இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் நீச்சல் குளத்தில் நடைபயிற்சி செய்யும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.