இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருவதாகவும், இதற்காக ரஜினி கேரளாவில் உள்ள கொச்சிக்கு விமானத்தில் சென்றுள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. படப்பிடிப்பு முடிந்த பின்னர் ரஜினி சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.